திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி

தினமலர்  தினமலர்
திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி

வாஷிங்டன்; திபெத் செல்வதற்கு, அமெரிக்கர்களுக்கு சீனா தடை விதித்துள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்த விவகாரத்தில் தொடர்புடைய சீன அதிகாரிகள் உள்ளிட்டோர், அமெரிக்காவுக்குள் நுழைய விசா கட்டுப்பாடு விதிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் தன்னாட்சி பகுதியாக, இமயமலை பிராந்தியத்தில் அமைந்துள்ள திபெத் விளங்குகிறது.இதற்கு முழு தன்னாட்சிக்கு கேட்டு நீண்ட காலமாக போராட்டங்கள் நடந்து வருகின்றன. ஹாங்காங்கைத் தொடர்ந்து, திபெத்தையும், தன் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர, சீனா முயற்சித்து வருகிறது.தடைஇந்நிலையில், திபெத்துக்குள் நுழைய, அமெரிக்க அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், சுற்றுலா பயணியருக்கு சீனா, தடை விதித்துள்ளது.ஏற்கனவே, 'கொரோனா' வைரஸ் பரவல், ஹாங்காங்கில் சீனாவின் அத்துமீறல் உள்ளிட்ட பிரச்னைகளால், சீனா மற்றும் அமெரிக்கா இடையே, கடும் மோதல் போக்கு இருந்து வருகிறது.தற்போது சீனா விதித்துள்ள தடைக்கு, அமெரிக்கா பதிலடி கொடுத்துஉள்ளது.இது குறித்து, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர், மைக் போம்பியோ கூறியுள்ளதாவது:திபெத்துக்குள் நுழைய அமெரிக்கர்களுக்கு தடை விதிக்கும் சீன அதிகாரிகள், அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கும் வகையில், 2018 டிசம்பரில், அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவு பிறப்பித்தார்.தற்போது அந்த சட்டத்தின்படி, திபெத்துக்குள் அமெரிக்கர்கள் நுழைவதற்கு தடை விதிக்கும் நடவடிக்கைகளில் தொடர்புடைய சீன அதிகாரிகள், அமெரிக்கா நுழைவதற்கு விசா கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது.

திபெத்துக்கு, உண்மையான, நியாயமான தன்னாட்சி வழங்கப்பட வேண்டும் என்பதில், அமெரிக்கா உறுதியாக உள்ளது. அனுமதிதிபெத்துக்குள் மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் செல்வதற்கு அனுமதி வழங்க வேண்டியது, தற்போதைய சூழ்நிலையில் மிகவும் தேவையான ஒன்று. மனித உரிமை மீறல், சுற்றுச்சூழலை பாதுகாக்கத் தவறியது என, சீனா தொடர்ந்து குற்றங்களை செய்து வருகிறது. அதனால், திபெத்துக்குள் நுழைவதற்கு தடை விதிப்பதை ஏற்க முடியாது.இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை