ட்வீட் கார்னர்... மீண்டும் அலான்சோ!

தினகரன்  தினகரன்
ட்வீட் கார்னர்... மீண்டும் அலான்சோ!

பார்முலா 1 கார் பந்தயத்தில் இரண்டு முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற பெர்னாண்டோ அலான்சோ (38 வயது, ஸ்பெயின்), ஓய்வு பெற்று 20 மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் போட்டிகளில் பங்கேற்க உள்ளதாக ட்விட்டரில் அறிவித்துள்ளார். 2021 சீசனில் ரெனால்ட் அணிக்காக மீண்டும் களமிறங்கப் போவதாக அவர் அறிவித்துள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒரே அணிக்காக 3 வெவ்வேறு கால கட்டங்களில் போட்டியிட்ட முதல் டிரைவர் என்ற பெருமை அலான்சோவுக்கு கிடைத்துள்ளது. ரெனால்ட் அணிக்காக முதலில் 2003-2006 வரை களமிறங்கியபோது தான் அவர் 2 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றார். பின்னர் 2008-09ல் மீண்டும் ரெனால்ட் அணியில் அங்கம் வகித்தார். மினார்டி, மெக்லாரென், பெராரி அணிகளுக்காகவும் இவர் பார்முலா 1 கார் பந்தயங்களில் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை