நடிகர் சுஷில்கவுடா தற்கொலை

தினகரன்  தினகரன்
நடிகர் சுஷில்கவுடா தற்கொலை

பெங்களூரு: மண்டியா மாவட்டம் வி.வி நகர் லே அவுட்டை சேர்ந்தவர் சுஷில்கவுடா (30). கன்னடத்தில் ஏராளமான தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். மேலும்  துனியா விஜய் நடித்த ஒரு படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவல் சம்பந்தப்பட்ட போலீசாருக்கு  கிடைத்தது. அவர்கள் சென்று சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். அதில் தற்கொலைக்கான உண்மையான காரணம் தெரியவில்லை. 

மூலக்கதை