இங்கிலாந்து அணி பேட்டிங் | ஜூலை 08, 2020

தினமலர்  தினமலர்
இங்கிலாந்து அணி பேட்டிங் | ஜூலை 08, 2020

சவுத்தாம்ப்டன்: மழை காரணமாக தாமதமான முதல் டெஸ்டில், ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

கொரோனா காரணமாக தடைபட்ட கிரிக்கெட் போட்டி மீண்டும் துவங்கியது. இங்கிலாந்து அணி தனது சொந்த மண்ணில் விண்டீஸ் அணிக்கு எதிராக மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் சவுத்தாம்ப்டன், ஏஜஸ் பவுல் மைதானத்தில் துவங்கியது. 

துவக்கத்தில் லேசான மழை வர போட்டி பாதிக்கப்பட்டது. மழை நின்றாலும் மைதானம் ஈரமாக இருந்தது. இதனால் 30 நிமிடங்கள் முன்னதாக உணவு இடைவேளை வந்தது. பின் 2:30 மணி நேரம் தாமதமாக போட்டி துவங்கியது. 

‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ், பேட்டிங் தேர்வு செய்தார். 

மூலக்கதை