2020ல் ஐ.பி.எல்., ‘டுவென்டி–20’: கங்குலி நம்பிக்கை | ஜூலை 08, 2020

தினமலர்  தினமலர்
2020ல் ஐ.பி.எல்., ‘டுவென்டி–20’: கங்குலி நம்பிக்கை | ஜூலை 08, 2020

புதுடில்லி: ‘‘இந்த ஆண்டு ஐ.பி.எல்., தொடர் நிச்சயம் நடத்தப்படும். இதனை இந்தியாவில் நடத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்,’’ என, கங்குலி தெரிவித்துள்ளார்.

இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) கிரிக்கெட் தொடரின் 13வது சீசன் கடந்த மார்ச் 29ல் துவங்க இருந்தது. ஆனால், கொரோனா காரணமாக காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இத்தொடரை நடத்த இலங்கை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.இ.,), நியூசிலாந்து அணிகள் விருப்பம் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தலைவர் சவுரவ் கங்குலி கூறியது:

ஐ.பி.எல்., தொடர் இல்லாமல் 2020ம் ஆண்டு முடிவதை நாங்கள் விரும்பவில்லை. இதனை இந்தியாவில் நடத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும். எங்களுக்கு 35 முதல் 40 நாட்கள் கிடைத்தாலும், இத்தொடரை நடத்திவிடுவோம்.

ஆனால் எங்கு நடத்துவது என்று தான் தெரியவில்லை. ஏனெனில் மும்பை, டில்லி, கோல்கட்டா, சென்னை போன்ற நகரங்களில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால், இங்கு போட்டியை நடத்த முடியுமா என்று தெரியவில்லை. தற்போதுள்ள சூழ்நிலையில் இந்தியாவில் நடத்துவது எளிதானதல்ல.

ஒருவேளை இந்தியாவில் நடத்த முடியாமல் போனால் வெளிநாடுகளில் நடத்துவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். ஆனால் அன்னிய மண் என்றால் கூடுதல் செலவாகும். தவிர, ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள ‘டுவென்டி-–20’ உலக கோப்பை குறித்து ஐ.சி.சி.,யின் முடிவுக்காக காத்திருக்கிறோம்.

இவ்வாறு கங்குலி கூறினார்.

ஐந்து பேருக்கு வாய்ப்பு

தற்போதுள்ள இந்திய அணியில் இருந்து 5 வீரர்களை தனது காலத்தில் விளையாடிய டெஸ்ட் அணிக்கு தேர்வு செய்வது குறித்து கங்குலி கூறுகையில், ‘‘தற்போதுள்ள வீரர்களில் கோஹ்லி, ரோகித் சர்மா, பும்ரா, முகமது ஷமி, அஷ்வின் ஆகியோரை தேர்வு செய்கிறேன். துவக்க வீரராக சேவக் இருப்பதால் மயங்க் அகர்வால் தேர்வு செய்யப்படவில்லை. ‘ஆல்-ரவுண்டர்’ ரவிந்திர ஜடேஜாவையும் சேர்க்க விரும்புகிறேன்,’’ என்றார்.

பிறந்த நாள் வாழ்த்து

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, நேற்று தனது 48வது பிறந்த நாள் கொண்டாடினார். இவருக்கு சச்சின், கோஹ்லி, லட்சுமண், முகமது கைப் உள்ளிட்டோர் ‘டுவிட்டரில்’ வாழ்த்து தெரிவித்தனர். சச்சின் வெளியிட்ட செய்தியில், ‘பிறந்த நாள் வாழ்த்துக்கள் கங்குலி. களத்தில் நமது வலிமையான ‘பார்ட்னர்ஷிப்’ தற்போதும் தொடர்கிறது என்று நம்புகிறேன்,’ என, தெரிவித்திருந்தார்.

மூலக்கதை