ஆசிய கோப்பை கிரிக்கெட் ரத்து | ஜூலை 08, 2020

தினமலர்  தினமலர்
ஆசிய கோப்பை கிரிக்கெட் ரத்து | ஜூலை 08, 2020

புதுடில்லி: கொரோனா காரணமாக ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

பாகிஸ்தானில், வரும் செப்டம்பர் மாதம் ஆசிய கோப்பை ‘டுவென்டி–20’ கிரிக்கெட் தொடர் நடக்க இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக திட்டமிட்டபடி நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தவிர, பாகிஸ்தான் சென்று இந்திய அணி போட்டியில் பங்கேற்பது சிக்கல் என்பதால், வேறு இடத்தில் நடத்தப்படலாம் என்றும் கூறப்பட்டது. சமீபத்தில் இத்தொடரை நடத்த இலங்கை கிரிக்கெட் போர்டு விருப்பம் தெரிவித்திருந்தது.இந்நிலையில் கொரோனா காரணமாக ஆசிய கோப்பை ரத்து செய்யப்பட்டதாக, ‛ஆன்லைன்’ நிகழ்ச்சி ஒன்றில் பி.சி.சி.ஐ., தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கங்குலி கூறுகையில், ‛‛கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த ஆண்டு ஆசிய கோப்பை நடத்தபடமாட்டாது. இதனால் இந்திய வீரர்கள் முதலில் எந்த தொடரில் விளையாடப் போகிறார்கள் என்று தெரியவில்லை. தவிர, கொரோனா பாதிப்பு எப்போது முடிவுக்கு வரும் என்று கணிக்க முடியவில்லை. அனைவரும் காத்திருப்போம்,’’ என்றார்.

மூலக்கதை