தினமும் 3 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை சு.வெங்கடேசன் எம்.பி., கோரிக்கை

தினமலர்  தினமலர்
தினமும் 3 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை சு.வெங்கடேசன் எம்.பி., கோரிக்கை

மதுரை, 'மதுரையில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை 3 ஆயிரமாக அதிகரிக்க வேண்டும்' என சுகாதார செயலர் ராதாகிருஷ்ணனிடம் சு.வெங்கடேசன் எம்.பி., கோரிக்கை விடுத்தார்.
மதுரையில் தினமும் 300 பேர் வரை பாதிக்கப்படுகின்றனர். இவர்களிடம் தொடர்பில் இருந்த அனைவரும் சோதிக்கப்படுவதில்லை. பாதித்தவர் ஒருவரின் வீட்டில் 4 பேர் இருப்பர் என்று கணக்கிட்டால் 1200 பேர் வருவர். பிற தொடர்பாளர்கள் 3 பேர் என எடுத்துக்கொண்டால் கூட 900 பேர் வருவர். குறைந்தபட்ச தொடர்பாளர்களின் எண்ணிக்கையே 2100 ஆக உள்ளது. ஆனால் மாவட்ட நிர்வாகம் அதிகபட்சம் 1500 பரிசோதனைகள் தான் மேற்கொள்கிறது. தினமும் பரிசோதனையை 3 ஆயிரமாக உயர்த்த வேண்டும்.
மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனாவிற்கு 1300 படுக்கைகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் இதில் பாதி அளவே தயாராக உள்ளன. எனவே படுக்கை எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.
மதுரை மாநகராட்சியில் தினமும் 32 காய்ச்சல் முகாம்கள் நடக்கின்றன. இதை 50 ஆக அதிகப்படுத்த வேண்டும். புறநகரிலும் தொடர்முகாம்கள் வேண்டும்.
மதுரையில் தொற்றின் வேகம், இறப்பு விகிதம் அதிகரிக்கிறது. இந்நிலையில் கொரோனா பணியில்ஈடுபடும் அதிகாரிகள் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். இப்போது மதுரையில் சிறப்பாக செயல்படும் மருத்துவ துறை அதிகாரியை சென்னைக்கு மாற்ற முயற்சி நடக்கிறது. நெருக்கடியான இந்நேரத்தில் அரசு இது போன்ற நடவடிக்கையை எடுத்து மதுரையை துயரத்துக்குட்படுத்த வேண்டாம் என கோரிக்கை விடுத்துஉள்ளார்.

மூலக்கதை