கொரோனா போல பல வியாதிகள் உருவாகும்: ஐநா எச்சரிக்கை

தினமலர்  தினமலர்
கொரோனா போல பல வியாதிகள் உருவாகும்: ஐநா எச்சரிக்கை

நியூயார்க்: பிராணிகளிடம் இருந்து மனிதருக்கு நோய்கள் பரவுவதை கட்டுப்படுத்த சரியான நடவடிக்கை எடுக்கவில்லை எனில், கொரோனா போல பல வியாதிகள் உருவாகும் என ஐ.நா., சுற்றுச்சூழல் அறிவியல் பிரிவு தலைவர், மார்டன் கப்பிலி தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் கூறியதாவது: கடந்த, 1919ல், 'ஸ்வைன் ப்ளு' வந்து மனித உயிர்களை பறித்தது. 100 ஆண்டுகள் கழித்து, தற்போது கொரோனா பாதிப்பு வந்துள்ளது. இடையில் பல வைரஸ் தாக்குதல்களை உலகம் கண்டுள்ளது.

கடந்த, 1996ல், 'பேர்டு ப்ளு' எனப்படும், பறவைக் காய்ச்சல் வந்தது. 1998ல், 'நிபா' வைரஸ்; 2003ல், 'சார்ஸ்' நோய்; 2016ல், 'சாட்ஸ்' தொற்று ஆகிய அனைத்தும், சீனாவின் குவாங்டங் மாகாணத்தில் இருந்து தான் தோன்றின. அங்கு பிராணிகளிடம் இருந்து, மனிதர்களுக்கு வைரஸ் தொற்றி உள்ளது. கொரோனாவும், பிராணிகளிடம் இருந்து தான் மனிதருக்கு பரவி உள்ளது.


இத்தகைய பரவலை கட்டுப்படுத்த, உலக நாடுகள் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால், கொரோனா போல, பிராணிகளிடம் இருந்து, மனிதர்களுக்கு பரவும் மேலும் பல வைரஸ்கள், மனிதர்களை தாக்கக் கூடும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மூலக்கதை