வெளிநாட்டு வீரரை குறைக்க நீடா அம்பானி ஒப்புதல்

தினகரன்  தினகரன்
வெளிநாட்டு வீரரை குறைக்க நீடா அம்பானி ஒப்புதல்

இந்தியாவில் நடைபெறும் ஐஎஸ்எல், ஐ-லீக் உள்ளிட்ட முக்கியத் தொடர்களில் விளையாடும் வெளிநாட்டு வீரர்களின் எண்ணிக்கையை 4 ஆக குறைக்க வேண்டும் என்று  இந்திய கால்பந்து கூட்டமைப்பு (ஏஐஎப்எப்) முடிவு எடுத்துள்ளது. இந்த முடிவை ஐஎஸ்எல் கால்பந்து தொடரை நடத்தும் புட்பால் ஸ்போர்ட்ஸ் டெவலப்மென்ட் லிட் நிறுவனத்தின் தலைவர் நீடா அம்பானி ஏற்றுக் கொண்டுள்ளார். ஆனால் இந்த ஆண்டுக்கான வீரர்களை ஏற்கனவே தேர்வு செய்து விட்டதால், 2021-22 சீசனில் புதிய மாற்றத்தின் படி வெளிநாட்டு வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் அறிவித்துள்ளார். ஐஎஸ்எல் தொடரில் விளையாடும் அணிகள் தலா 7 வெளிநாட்டு வீரர்களை தேர்வு செய்து கொள்ளலாம். ஒரு போட்டியில், அவர்களில் இருந்து அதிகபட்சமாக 5 பேர் வரை இடம் பெற அனுமதிக்கப்பட்டு வந்தார்கள். ஆனால் புதிய மாற்றத்தின்படி ஒரு அணி 6 வெளிநாட்டு வீரர்களை தேர்வு செய்துகொள்ளலாம். அந்த 6 பேரில் ஒருவர் கட்டாயம் ஆசிய நாடுகளைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். இது ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் கட்டுப்பாடு. அதேபோல் ஆடும் அணியில் 4 வெளிநாட்டு வீரர்கள் களம் காணலாம். அந்த 4 பேரிலும் ஒருவர் ஆசிய நாட்டைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை