ஆன்லைன் வகுப்பு நடத்தினால் வெளிநாட்டு மாணவர்கள் வெளியேற்றப்படுவார்கள்: பல்கலைகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

தினகரன்  தினகரன்
ஆன்லைன் வகுப்பு நடத்தினால் வெளிநாட்டு மாணவர்கள் வெளியேற்றப்படுவார்கள்: பல்கலைகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

நியூயார்க்: அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு மிகத் தீவிரமாக உள்ளது. இதனால், அங்கு பல கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் வகுப்புகளை தொடங்கி உள்ளன. சில பல்கலைக் கழங்களும் ஆன்லைனில் பாடங்களை நடத்தி வருகின்றன. இந்நிலையில், அமெரிக்க குடியேற்றத் துறை நேற்று விடுத்த செய்திக் குறிப்பில், ‘செப்டம்பர்  முதல் டிசம்பர் வரையிலான செமஸ்டர் தேர்வுக்கான வகுப்புகளை முழுமையாக ஆன்லைனில் எடுக்க உள்ள பல்கலைக் கழகங்களில் பயிலும் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா வழங்கப்படாது. அவர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் அல்லது வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்,’ என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும், ‘அனைத்து பல்கலைக் கழகங்களும் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தத் தொடங்கினால், வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா வழங்குவது முற்றிலும் நிறுத்தப்படும்,’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை