இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து 5வது நாளாக ஏற்றம்: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி

தினகரன்  தினகரன்
இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து 5வது நாளாக ஏற்றம்: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி

மும்பை: இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து 5வது நாளாக ஏற்றமடைந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 187 புள்ளிகள் உயர்ந்து 36,675 புள்ளிகளானது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 36 புள்ளிகள் அதிகரித்து 10,800 புள்ளிகளில் முடிந்துள்ளது.\r பஜாஜ் பைனான்ஸ் பங்கு விலை 7.8 சதவீதமும் இண்டஸ்இண்ட் வங்கி பங்கு விலை 6%ம் அதிகரித்தன. பஜாஜ் ஃபின்செர்வ் பங்கு விலை 5%-ம் ஐசிஐசிஐ வங்கி பங்கு 3.8%ம் ஆக்சிஸ் வங்கி பங்கு 3% உயர்ந்துள்ளது. என்.டி.பி.சி., ஐ.டி.சி., டாடா ஸ்டீல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் விலை குறைந்து வர்த்தகம் ஆகின.\r சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.32 உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,622க்கும் சவரன் ரூ.37,008க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.53.30க்கு விற்கப்படுகிறது.

மூலக்கதை