இந்திய தேசநலனை காப்பது மத்திய அரசின் தலையாய கடமை: 20 இந்திய வீரர்களை படுகொலை குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி டீவீட்..!!

தினகரன்  தினகரன்
இந்திய தேசநலனை காப்பது மத்திய அரசின் தலையாய கடமை: 20 இந்திய வீரர்களை படுகொலை குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி டீவீட்..!!

டெல்லி: இந்திய தேசநலனை காப்பது மத்திய அரசின் தலையாய கடமை என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி டீவீட் செய்துள்ளார். நமது மண்ணில் 20 ராணுவ வீரர்களை படுகொலை செய்ததை சீனா நியாயப்படுத்த ஏன் அனுமதிக்கப்பட்டது என ட்விட்டரில் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இருந்து சீனா தனது துருப்புக்களை திரும்பப் பெற்றது தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை வெளியிட்ட அறிக்கையில், கால்வான் பள்ளத்தாக்கின் இறையாண்மை பற்றிய தெளிவான தகவல்  இடம்பெறாதது ஏன்?  என்று ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்திய ராணுவத்தினர் மீது சீனா நடத்தியது திட்டமிட்ட தாக்குதல். மத்திய அரசு வேகமாகத் தூங்கிவிட்டு, பிரச்சினையை அறிய மறுக்கிறது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். கல்வானில் இந்தியா-சீனா மோதல் தொடர்பாக இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ள நிலையில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இந்தக் குற்றச்சாட்டை வைத்துள்ளார்இதனையடுத்து கால்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில், முன்பிருந்த இருந்த நிலையே தொடர வேண்டும் என ஏன் இந்தியா வலியுறுத்தவில்லை? நமது மண்ணில் ஊடுருவி, ஆயுதங்களற்ற 20 இந்திய ராணுவ வீரர்களை படுகொலை செய்ததை சீனாவை, தனது நிலைப்பாட்டை  நியாயப்படுத்த அனுமதித்தது ஏன்? தேச நலனை காப்பது இந்திய அரசின் தலையாய கடமை என்று தெரிவித்துள்ளார்.

மூலக்கதை