இந்திய மண்ணில் ஐ.பி.எல்.,: பி.சி.சி.ஐ., நம்பிக்கை | ஜூலை 07, 2020

தினமலர்  தினமலர்
இந்திய மண்ணில் ஐ.பி.எல்.,: பி.சி.சி.ஐ., நம்பிக்கை | ஜூலை 07, 2020

புதுடில்லி: ‛‛ஐ.பி.எல்., தொடரை இந்தியாவில் நடத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்,’’ என, பி.சி.சி.ஐ., பொருளாளர் அருண் துமால் தெரிவித்துள்ளார்.

இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) கிரிக்கெட் தொடரின் 13வது சீசன் கடந்த மார்ச் 29ல் துவங்க இருந்தது. கொரோனா காரணமாக காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள ‛டுவென்டி–-20’ உலக கோப்பை (அக். 18–நவ. 15) ஒத்திவைக்கப்பட்டால், இத்தொடர் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தவிர இத்தொடரை நடத்த இலங்கை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.இ.,), நியூசிலாந்து அணிகள் விருப்பம் தெரிவித்தன.

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) பொருளாளர் அருண் துமால் கூறுகையில், ‛‛ஐ.பி.எல்., தொடரை நடத்துவதற்கான் சூழ்நிலைகளை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். முதலில் இந்தியாவில் நடத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும். தேவைப்பட்டால், வெளிநாடுகளில்  நடத்துவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். இதுகுறித்து அடுத்த ஐ.பி.எல்., பொதுக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்படும்,’’ என்றார்.

மூலக்கதை