ரோகித் சர்மா கேப்டன்: ஸ்ரீசாந்த் ‛லெவன்’ அணிக்கு | ஜூலை 07, 2020

தினமலர்  தினமலர்
ரோகித் சர்மா கேப்டன்: ஸ்ரீசாந்த் ‛லெவன்’ அணிக்கு | ஜூலை 07, 2020

புதுடில்லி: வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் தேர்வு செய்துள்ள ‛டுவென்டி–-20’ போட்டிக்கான இந்திய ‛லெவன்’ அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் 37. கேரளாவை சேர்ந்த இவர், இதுவரை 27 டெஸ்ட், 53 ஒருநாள் மற்றும் 10 சர்வதேச ‛டுவென்டி-20’ போட்டிகளில் பங்கேற்றுள்ளார். கடந்த 2013ல் ஐ.பி.எல்., தொடரில் நடந்த ‛ஸ்பாட் பிக்சிங்’ சூதாட்டம் காரணமாக போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டிருந்தார். இவரது தடைக் காலம் வரும் செப்டம்பர் மாத இறுதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் இவர், ‛டுவென்டி–-20’ போட்டிக்கான இந்திய ‛லெவன்’ அணி ஒன்றை தேர்வு செய்துள்ளார்.இதில் துவக்க வீரர்களாக ரோகித் சர்மா, ஷிகர் தவான் இடம் பிடித்துள்ளனர். அடுத்த இரு இடங்களுக்கு விராத் கோஹ்லி, ரெய்னாவை தேர்வு செய்துள்ளார். லோகேஷ் ராகுலுக்கு 5வது இடம் வழங்கிய இவர், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக தோனிக்கு வாய்ப்பு வழங்கி உள்ளார். ‛ஆல் -ரவுண்டர்களாக’ ஹர்திக் பாண்ட்யா, ரவிந்திர ஜடேஜா இடம் பிடித்துள்ளனர். ‛சுழல்’ வீரராக குல்தீப் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வேகப்பந்துவீச்சாளர்களாக ஜஸ்பிரித் பும்ராவுடன், தன்னையும் சேர்த்துள்ளார்.

இதுகுறித்து ஸ்ரீசாந்த் கூறுகையில், ‛‛மூன்று வித போட்டிகளுக்கும் ஒரே அணி இருக்க வேண்டும். சர்வதேச ‛டுவென்டி–-20’ போட்டியில் விளையாடும் தகுதி ரெய்னாவுக்கு இருப்பதாக நம்புகிறேன். கேப்டனாக கோஹ்லி சிறப்பாக செயல்படுகிறார். இருப்பினும் ‛டுவென்டி–-20’ போட்டிக்கு ரோகித் சர்மா கேப்டனாக செயல்பட விரும்புகிறேன்,’’ என்றார்.

‛லெவன்’ அணி: ரோகித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், விராத் கோஹ்லி, ரெய்னா, லோகேஷ் ராகுல், தோனி (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா, ரவிந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, ஸ்ரீசாந்த்.

மூலக்கதை