தொடர் போர்களால் ஏமனில் நிலவும் பஞ்சம்; சிறார்கள் அவதி

தினமலர்  தினமலர்
தொடர் போர்களால் ஏமனில் நிலவும் பஞ்சம்; சிறார்கள் அவதி

சனா: ஏமன் நாட்டில் பசி, பட்டினி, பஞ்சம் அதிகரித்துவருகிறது. சிறுவர், சிறுமியர் பலர் உணவு இல்லாமல் தவித்து வருகின்றனர். இவர்களுக்கு ஏமன் நாட்டு அரசும் தன்னார்வலர்களும் உதவி வருகின்றனர். ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக சிறுவர்கள் உடல் முழு வளர்ச்சி அடையாமல் அவர்களுக்கு உணவு ஊசி மூலம் வழங்கப்படுகிறது. இதில் மார்ஷா என்ற பெண்ணுக்கு ஏற்பட்ட ஊட்டச்சத்து குறைபாடு தற்போது அதிக கவனம் பெற்றுள்ளது. கொரோனா தாக்கம் அதிகரித்துள்ள இந்த வேளையிலும் ஏமனில் உள்நாட்டு குழப்பங்கள் நீடித்து வருகின்றன.

கடந்த 7 ஆண்டுகளாக ஏமன் நாட்டில் இந்த சூழல் நிலவுகிறது. அரேபிய தீபகற்பத்தில் உள்ள மிகவும் ஏழை நாடு ஏமன். ஏமன் குறித்து கூறுகையில் உலகின் மோசமான சுகாதார சீர்கேடு மற்றும் சத்து குறைபாடு கொண்ட நாடு என வர்ணிக்கிறது ஐநா. பல ஆண்டுகளாக அரசியல் மோதல்கள் போராட்டங்கள் ஆகியவற்றால் சிதிலமடைந்தது ஏமன்.

2014 ஜூலை 8 வரை ஏமனில் நடந்த போரில் பலர் உணவின்றி தவித்தனர். வீடுகள் இல்லாமல் நடுத் தெருவில் குடியிருக்கும் அவல நிலைக்கு குடிமக்கள் தள்ளப்பட்டனர். ஏமனில் ஆட்சியைப் பிடிக்க பல்வேறு புரட்சிப் படைகள் முயன்று வருகின்றன. இவற்றில் ஹுத்தி புரட்சிப்படை முக்கியமான ஒன்று. இது தனது ராணுவப் படைகளை ஏவி ஏமனில் அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியது.

இந்தப் புரட்சிப் படைகளுக்கு ஏமன் நாட்டுக்கு எதிரான சில நாடுகள் நிதி அளிப்பதாக சர்ச்சை எழுந்தது. பொதுவாகவே அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் பிற நாடுகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர உள்நாட்டு கலவரங்களைத் தூண்டிவிட முயலும். இது ஐநாவின் கட்டுப்பாடுகளுக்கு எதிரானதுதான். ஆனால் தொடர்ந்து இதுபோல மத்திய ஆசிய நாடுகளில் புரட்சிகரப் படைகளுக்கு ஆயுதம் வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் சில நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. இதனால் அந்த நாட்டில் பசி பட்டினி பஞ்சம் அதிகரித்து மக்கள் அவதியுறுகின்றனர்.

மூலக்கதை