இந்தியாவில் கடந்த 2 மாதங்களில் சைபர் தாக்குதல்கள் 200 மடங்கு அதிகரிப்பு

தினகரன்  தினகரன்
இந்தியாவில் கடந்த 2 மாதங்களில் சைபர் தாக்குதல்கள் 200 மடங்கு அதிகரிப்பு

மும்பை: இந்தியாவில் கடந்த 2 மாதங்களில் சைபர் தொடர்பான குற்றங்கள், சம்பவங்கள் 200 சதவீதம் அதிகரித்துள்ளதாக பிரதமர் அலுவலகத்தின் தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.\r பிரதமர் அலுவலகத்தின் தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரி குல்ஷன் ராய் கூறுகையில், கடந்த இரு மாதங்களாக இந்தியாவில் சைபர் தொடர்பான சம்பவங்கள், குற்றங்கள் அதிகரித்துள்ளன. கொரோனா வைரஸாஸ் வீட்டிலிருந்தே கணினி மூலம் பணியாற்றும் சூழல் அதிகரித்துள்ளது. கணினி மூலம் பணியாற்றுவோர் எந்தவிதமான பாதுகாப்பு வழிமுறையும் இன்றி, தேவையற்ற, பாதுகாப்பில்லா செயலிகளைப் பதிவிறக்கம் செய்வதே காரணமாகும்.\r கடந்த இரு மாதங்களாக சைபர் தொடர்பான குற்றங்களான ஹேக்கிங் செய்தல், கணக்கிலிருந்து பணத்தை திருடுதல், விவரங்களைத் திருடுதல் போன்ற பல்வேறு சைபர் தொடர்பான சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி, பிப்ரவரி மாதத்திலிருந்து ஏராளமானோர் வீட்டில் இருந்து பணியாற்ற தொடங்கியதிலிருந்துதான் இதுபோன்ற சைபர் குற்றங்களும், தாக்குதல்களும் அதிகரித்து வருகின்றன. இவ்வாறு நடைபெறும் அனைத்து சைபர் சம்பவங்களையும், குற்றங்களையும் மத்திய அரசின் தனிப்பட்ட அமைப்பு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.\r வீட்டில் இருந்து பணியாற்றுவோர் தேவையான அளவு சைபர் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் பணியாற்ற வேண்டும். குறிப்பாக தங்களுக்கு தேவையான ஆவணங்கள், செயலிகளை பதவிறக்கம் செய்யும் போது மிகவும் கவனத்துடன், அங்கீகரிக்கப்பட்ட செயலிகளை மட்டுமே பதவிறக்கம் செய்ய வேண்டும். நாள்தோறும் தொழில்நுட்பங்கள் மாறிவரும் சூழலில், இந்த சைபர் தாக்குதலில் இருந்து வங்கிகளைக் காக்க வங்கிகள் நடவடிக்கைகள் அனைத்திற்கும் துகாப்பு அளிக்கும் சைபர் செக்யூரிட்டி முறையை புதிதாக அறிமுகப்படுத்துவது அவசியம் என்று ராய் கூறியுள்ளார்.

மூலக்கதை