அமெரிக்காவில் சிக்கிய 206 ஊழியர்களை தனி விமானம் மூலம் தாயகம் அழைத்து வந்தது இன்போசிஸ் நிறுவனம்

தினகரன்  தினகரன்
அமெரிக்காவில் சிக்கிய 206 ஊழியர்களை தனி விமானம் மூலம் தாயகம் அழைத்து வந்தது இன்போசிஸ் நிறுவனம்

டெல்லி: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அமெரிக்காவில் சிக்கிய 206 இந்திய ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரைத் தனி விமானம் மூலம் இன்போசிஸ் நிறுவனம் தாயகம் அழைத்து வந்துள்ளது. அமெரிக்காவில் பணிக்காக சென்றுள்ள இந்தியர்கள் சர்வதேச விமானச் சேவை ரத்து செய்யப்பட்டதால் தாயகம் திரும்ப முடியாமல் சிக்கியுள்ளனர்.\r இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான இன்போசிஸ் தனது நிறுவனத்தில் பணியாற்றும் 206 ஊழியர்கள், அவர்களின் குடும்பத்தினரை அமெரிக்காவில் இருந்து தனி விமானம் மூலம் இந்தியா அழைத்து வர முடிவு செய்தது. சான் ஃபிரான்சிஸ்கோ நகரிலிருந்து 206 ஊழியர்கள், 100-க்கும் மேற்பட்ட அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோருடன் புறப்பட்ட தனி விமானம் பெங்களூருவிற்கு வந்து சேர்ந்தது. அனைவருக்கும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் விதிமுறைப்படி கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மூலக்கதை