‘அர்ஜுனா’ விருது * பும்ரா புறக்கணிப்பு | ஜூலை 06, 2020

தினமலர்  தினமலர்
‘அர்ஜுனா’ விருது * பும்ரா புறக்கணிப்பு | ஜூலை 06, 2020

புதுடில்லி: வேகப்பந்து வீச்சாளர் பும்ரா பெயர் ‘அர்ஜுனா’ விருதுக்கு பரிந்துரைக்கப்படவில்லை எனத் தெரிகிறது.

விளையாட்டுத்துறையில் ஜொலிக்கும் இந்திய நட்சத்திரங்களுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு சார்பில் அர்ஜுனா விருது வழங்கப்படும். இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, துவக்க வீரர் ஷிகர் தவான் ஆகியோரது பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகின. 

தற்போது இஷாந்த் சர்மா, ஷிகர் தவான், வீராங்கனை தீப்தி சர்மா என மூன்று பேருக்கு ‘அர்ஜுனா’, ரோகித் சர்மாவுக்கு ‘கேல் ரத்னா’ வழங்க மட்டும் பி.சி.சி.ஐ., பரிந்துரைத்தது தெரியவந்துள்ளது. வேகப்பந்துவீச்சாளர் பும்ரா 26, கடந்த நான்கு ஆண்டுகளில் 14 டெஸ்ட் (68 விக்கெட்), 64 ஒருநாள் (104), 50 சர்வதேச ‘டுவென்டி–20’ (59) என மூன்று வித போட்டிகளிலும் அசத்தி வருகிறார். 

கடந்த ஆண்டு பூணம் யாதவ், முகமது ஷமி, ஜடேஜாவுக்கு ‘அர்ஜூனா’ வழங்கப்பட்ட நிலையில், தொடர்ந்து இந்த ஆண்டும் பும்ரா பெயர் பரிந்துரை செய்யப்படாதது அதிர்ச்சியாக உள்ளது.

மூலக்கதை