இங்கிலாந்து தொடருக்கு தயாராகுங்கள் * ஆஸி., வீரர்களுக்கு வேண்டுகோள் | ஜூலை 06, 2020

தினமலர்  தினமலர்
இங்கிலாந்து தொடருக்கு தயாராகுங்கள் * ஆஸி., வீரர்களுக்கு வேண்டுகோள் | ஜூலை 06, 2020

மெல்போர்ன்: இங்கிலாந்து மண்ணில் நடக்கும் தொடருக்கு தயாராக இருக்குமாறு, ஆஸ்திரேலிய வீரர்களுக்கு வேண்டுகோள் விடப்பட்டதாக தெரிகிறது.

ஆஸ்திரேலியாவில் வரும் அக். 18 – நவ. 15ல் ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடர் நடக்கவுள்ளது. கொரோனா காரணமாக 16 அணிகளை ஒருங்கிணைத்து இத்தொடர் நடத்துவது சிக்கல் என்பதால், இந்த வாரம் உலக கோப்பை ஒத்திவைக்கப்படுவது குறித்து அறிவிப்பு வெளியாகும் எனத் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து இங்கிலாந்து மண்ணில் செப்., மாதம் நடக்கவுள்ள ஒருநாள் மற்றும் ‘டுவென்டி–20’ தொடருக்கு தயாராக இருக்குமாறு ஆஸ்திரேலிய அணி வீரர்களுக்கு வேண்டுகோள் விடப்பட்டுள்ளதாக தெரிகிறது. 

ஆஸ்திரேலியாவில் வெளியாகும் ‘தி டெய்லி டெலிகிராப்’ பத்திரிகையில் இதுகுறித்து கூறப்பட்டுள்ளது. அதில்,‘‘உலக கோப்பை ‘டுவென்டி–20’ ரத்து குறித்த செய்தி இந்த வாரம் வெளியாகும். ஆஸ்திரேலிய வீரர்கள் இங்கிலாந்து செல்ல தயாராக இருக்க வேண்டும். இந்தியாவில் ஐ.பி.எல்., தொடர் நடந்தாலும் ஆஸ்திரேலிய வீரர்கள் நேரடியாக இங்கிலாந்து தான் செல்வர்,’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை