நேபாள பிரதமர் ஷர்மா ஒலி பதவி நீடிக்குமா நாளை முடிவு

தினமலர்  தினமலர்
நேபாள பிரதமர் ஷர்மா ஒலி பதவி நீடிக்குமா நாளை முடிவு

காத்மாண்டு: காத்மாண்டு: நேபாள பிரதமர் கே.பி.ஷர்மா ஒலியை பதவி விலகுமாறு கூறி ஆளும் நேபாள கம்யூ., கட்சி தலைவர்கள் போர்க்கொடி துாக்கி வரும் நிலையில் மீண்டும் நாளை கட்சியின் நிலைக்குழு கூட்டம் நடக்கிறது. அப்போது நேபாளம் பிரதமரின் எதிர்காலம் தீர்மானிக்கப்பட உள்ளது.

கடந்த ஜூலை 30-ல் நேபாள கம்யூ., கட்சியின் நிலைக் குழு கூட்டம் பலுவடாரில் உள்ள பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஆளும் கூட்டணி கட்சியைச் சேர்ந்த புஷ்ப கமல் பிரசண்டா, இந்தியா மீது பொய்யன குற்றச்சாட்டை கூறி நல்லுறவை பாதிக்கும் கையில் பேசியதற்காக பதவி விலக வேண்டும் ஷர்மாவை பிரசண்டா கேட்டுக் கொண்டார். இதனால் பிரதமர் கே.பி. சர்மா ஒலிக்கு சிக்கலை ஏற்படுத்தியது.இதனிடையே கே.பி.சர்மா ஒலியை பிரதமர் பொறுப்பில் இருந்து நீக்குவது தொடர்பாகவும் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிப்பது தொடர்பாகவும் தேசிய கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைக்குழு கூட்டம் கடந்த சனிக்கிழமை நடைபெற இருந்தது. ஆனால் திடீரென இந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு நாளை (புதன்கிழமை) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. .

மூலக்கதை