34 பேருக்கு கொரோனா; கோவையில் நகைப்பட்டறைக்கு சீல்

தினமலர்  தினமலர்
34 பேருக்கு கொரோனா; கோவையில் நகைப்பட்டறைக்கு சீல்

கோவை : 34 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட காரணமான நகைப்பட்டறைக்கு சீல் வைக்க கோவை கலெக்டர் ராஜாமணி உத்தரவிட்டார்.


கோவை செல்வபுரம் ஐயப்பா நகர் பகுதியில் நகைப்பட்டறை செயல்பட்டு வருகிறது. இப்பட்டறையில் ஏராளமானோர் பணிபுரிந்து வந்தனர். செல்வபுரம் பகுதியில் தொடர்ந்து அதிகளவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வந்தது. இதையடுத்து சுகாதார துறை சார்பில் செல்வபுரம் பகுதியில், 140 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் நேற்று ஒரே நாளில், ஐயப்பா நகரில் செயல்பட்டு வரும் தங்க நகைப்பட்டறையில் பணிபுரிந்த, 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.


பாதிப்புக்குள்ளான அனைவரும் கோவை கொடீசியாவில் ஏற்படுத்தப்பட்டுள்ள கொரோனா கண்காணிப்பு மையத்துக்கு மாற்றப்பட்டனர். இந்நிலையில், கொரோனா தொற்று ஏற்பட காரணமான நகைப்பட்டறைக்கு சீல் வைக்க கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து அப்பட்டறைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

மூலக்கதை