நவீன உளவு விமானங்கள் பாக்.,கிற்கு சீனா, 'சப்ளை'

தினமலர்  தினமலர்
நவீன உளவு விமானங்கள் பாக்.,கிற்கு சீனா, சப்ளை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானுக்கு, நான்கு அதி நவீன தாக்குதல் ரக உளவு விமானங்களை, சீனா, 'சப்ளை' செய்யவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாகிஸ்தானில், சாலை திட்டங்கள், துறைமுக திட்டங்கள், சீனா நிதியுதவியுடன் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவாடர் துறைமுகத்தில், சீனா சார்பில் புதிதாக கடற்படை தளம் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், சீனாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் விதமாக, சிறப்பு சாலை திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.


இந்நிலையில், இந்த இரண்டு திட்டங்களின் பாதுகாப்புக்காக, சீனா சார்பில், பாகிஸ்தானுக்கு, நான்கு ஆள் இல்லா உளவு விமானங்கள் சப்ளை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த உளவு விமானங்கள், கண்காணிப்பு பணியில் ஈடுபடுவது மட்டுமல்லாமல், தாக்குதல் நடத்தும் திறனும் உடையவை.

ஏற்கனவே இதுபோன்ற உளவு விமானங்களை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு சீனா ஏற்றுமதி செய்துள்ள நிலையில், தற்போது பாகிஸ்தானுக்கு, இந்த உளவு விமானங்களை அளிக்கும் திட்டம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மூலக்கதை