அ.தி.மு.க.,வில் அதிரடி? ஐவர் குழு ஆலோசனை

தினமலர்  தினமலர்
அ.தி.மு.க.,வில் அதிரடி? ஐவர் குழு ஆலோசனை

சென்னை: அ.தி.மு.க.,வில், நிர்வாகிகளை அதிரடியாக மாற்றம் செய்வது தொடர் பாக, ஐவர் குழு நேற்று, ஆலோசனை நடத்தியது.

அ.தி.மு.க.,வில், தற்போதுள்ள மாவட்டங் களில், சிலவற்றை பிரித்து, அவற்றுக்கு புதிய மாவட்ட செயலர்களை நியமிக்க, கட்சி தலைமை முடிவு செய்துள்ளது. அதேபோல, தற்போது சரியாக செயல்படாத, மாவட்ட செயலர் களை மாற்றவும், ஊராட்சி கிளை செயலர் பதவிக்கு பதிலாக, புதிய பதவிகளை அறிவிப்பது, தகவல் தொழில்நுட்ப பிரிவுக்கு, மாவட்ட அளவில் நிர்வாகிகள் நியமிப்பது போன்ற பணிகள் நடக்க உள்ளன.

இது தொடர்பாக, கட்சி மனுக்கள் குழுவில் இடம்பெற்றுள்ள, கட்சி துணை ஒருங்கிணைப்பாளர்கள், கே.பி.முனுசாமி, வைத்திலியங்கம், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன் ஆகியோர், நேற்று மாலை, கட்சியின் தலைமை அலுவலகத்தில் கூடி ஆலோசித்தனர். இன்னும் சில தினங்களில், கட்சியில் அதிரடி மாற்றங்களுக்கான அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது என, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

மூலக்கதை