கல்லூரி இறுதி ஆண்டு மற்றும் செமஸ்டர் தேர்வுகளை செப்டம்பர் இறுதிக்குள் நடத்த வேண்டும்: யூ.ஜி.சி., அறிவுறுத்தல்

தினமலர்  தினமலர்
கல்லூரி இறுதி ஆண்டு மற்றும் செமஸ்டர் தேர்வுகளை செப்டம்பர் இறுதிக்குள் நடத்த வேண்டும்: யூ.ஜி.சி., அறிவுறுத்தல்

புதுடில்லி: கல்லூரி இறுதி ஆண்டு மற்றும் செமஸ்டர் தேர்வுகளை இந்த ஆண்டு செப்டம்பர் மாத இறுதிக்குள் நடத்த வேண்டும் என்று பல்கலை மான்யக் குழு அறிவுறுத்தி உள்ளது.

இதன்படி ஜூலை 6ம் தேதி நடந்த கூட்டத்தில் கல்லூரி மற்றும் பல்கலை தேர்வு நடத்துதல் மற்றும் விதிமுறைகளை, நிபுணர் குழுவின் பரிந்துரையின் படி, பல்கலை மான்யக் குழு அங்கீகரித்தது.

கல்லூரி மற்றும் பல்கலைதேர்வுமுறை மற்றும் விதிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

கொரோனா பரவல் காரணமாக மாணவர்களின் பாதுகாப்பு, ஆரோக்கியம் போன்றவற்றை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. அதே நேரம் அவர்களின் கல்வி, எதிர்கால வேலை வாய்ப்பு, போன்ற விஷயங்களும் முக்கியம். கல்வித் தகுதி என்பது ஒவ்வொரு மாணவரின் வாழ்க்கையிலும் முக்கிய மைல்கல்லாக உள்ளது. மாணவர்கள் எழுதும் தேர்வுகள் வாழ்க்கையில் நம்பிக்கை, மற்றும் திருப்தி போன்றவற்றை ஏற்படுத்துகிறது.

கடைசி செமஸ்டர் மற்றும் இறுதி ஆண்டு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வரும் செப்டம்பர் மாதத்திற்குள் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். தேர்வானது ஆப்லைனாகவோ அல்லது ஆன்லைனாகவோ அல்லது இரண்டும் கலந்தோ நடத்தப்படலாம்.

கடைசி செமஸ்டர் அல்லது இறுதி ஆண்டிலோ அரியர்ஸ் வைத்திருக்கும் மாணவர்களுக்கு கண்டிப்பாக ஆப்லைனிலோ அல்லது ஆன்லைனிலோ தேர்வு நடத்தப்பட வேண்டும்.

தவிர்க்க முடியாத காரணங்களால் தேர்வுக்கு வர முடியாத மாணவர்களுக்கு சிறப்பு தேர்வுகள் எழுத வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். ஊரடங்கின் காரணமாக மாணவர்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது. மேற் கூறப்பட்ட விதிமுறைகள் 2019-20 கல்வி ஆண்டுக்கு மட்டுமே பொருந்தும்.

இடைநிலை செமஸ்டர் பயிலும் மாணவர்களக்கு 29.04 20020 அன்று தெரிவிக்கப்பட்டபடி விதிமுறைகளில் மாற்றம் இல்லை. வரும் ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை தொடர்பான விஷயங்கள் பின்னர் வெளியிடப்படும். இவ்வாறு அதில் தெரிவி்க்க்ப்பட்டுள்ளது.

மூலக்கதை