சிறந்த வீரர் குயின்டன் | ஜூலை 05, 2020

தினமலர்  தினமலர்
சிறந்த வீரர் குயின்டன் | ஜூலை 05, 2020

ஜோகனஸ்பர்க்: சிறந்த தென் ஆப்ரிக்க கிரிக்கெட் வீரருக்கான விருதுக்கு குயின்டன் டி காக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கிரிக்கெட் தென் ஆப்ரிக்கா (சி.எஸ்.ஏ.,) சார்பில், ஆண்டுதோறும் சிறந்த நட்சத்திரங்களுக்கு விருது வழங்கப்படும். சிறந்த வீரருக்கான விருதை ஒருநாள், ‘டுவென்டி–20’ அணி கேப்டன் குயின்டன் டி காக் 27, தட்டிச் சென்றார். ஏற்கனவே இவருக்கு 2017ல் இவ்விருது வழங்கப்பட்டது. இதன்மூலம் 2 முறை இவ்விருது வென்ற 6வது வீரரானார். இதற்கு முன், காலிஸ் (2004, 2011), நிடினி (2005, 2006), ஆம்லா (2010, 2013), டிவிலியர்ஸ் (2014, 2015), ரபாடா (2016, 2018) தலா 2 முறை இவ்விருதை கைப்பற்றினர். தவிர, ஷான் போலக் (2007), ஸ்டைன் (2008), கிரீம் ஸ்மித் (2009), பிலாண்டர் (2012), டுபிளசி (2019) தலா ஒரு முறை இவ்விருது வென்றனர்.

இம்முறை சிறந்த டெஸ்ட் போட்டி வீரருக்கான விருதையும் குயின்டன் டி காக் கைப்பற்றினார். சிறந்த ஒருநாள் மற்றும் ‘டுவென்டி–20’ போட்டி வீரருக்கான விருதுகளை வேகப்பந்துவீச்சாளர் லுங்கிடி தட்டிச் சென்றார். ரசிகர்கள் விரும்பும் வீரராக டேவிட் மில்லர் தேர்வானார். சிறந்த அறிமுக வீரருக்கான விருது ஆன்ரிச் நார்ட்ஜேவுக்கு வழங்கப்பட்டது. சிறந்த வீராங்கனையாக லாரா வால்வார்ட் தேர்வானார்.

மூலக்கதை