இங்கிலாந்து மண்ணில் சாதிப்போம்: கீமர் ரோச் நம்பிக்கை | ஜூலை 05, 2020

தினமலர்  தினமலர்
இங்கிலாந்து மண்ணில் சாதிப்போம்: கீமர் ரோச் நம்பிக்கை | ஜூலை 05, 2020

மான்செஸ்டர்: ‘‘இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சாதிப்போம்,’’ என, கீமர் ரோச் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து சென்றுள்ள விண்டீஸ் அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட், வரும் 8ல் சவுத்தாம்ப்டனில் துவங்குகிறது. மீதமுள்ள 2 போட்டிகள் மான்செஸ்டரில் (ஜூலை 16–20, 24–28) நடக்கிறது.

இதுகுறித்து விண்டீஸ் வேகப்பந்துவீச்சாளர் கீமர் ரோச் கூறியது: கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 2–1 என டெஸ்ட் தொடரை கைப்பற்றினோம். இதே முடிவை இம்முறை எதிர்பார்க்கிறோம். ஆனால் கடந்த முறை சொந்த மண்ணில் விளையாடினோம்.

இங்கிலாந்துக்கு எதிரான தொடர் மிகவும் முக்கியமானது. இதனை ‘ஆஷஸ்’ தொடர் போல கருதுகிறோம். இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது கடினம். இருப்பினும் முழுத்திறமையை வெளிப்படுத்தி கோப்பை வெல்ல முயற்சிப்போம்.

பந்தை பளபளப்பாக்க எச்சிலுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது சவாலானது. வியர்வை பயன்படுத்துவோம். இதற்கு இங்குள்ள தட்பவெப்பநிலை கைகொடுக்க வேண்டும்.

இவ்வாறு கீமர் ரோச் கூறினார்.

மூலக்கதை