பார்த்தாலே பதறியடிக்குது...கர்ப்பிணி வயிற்றில் 10 ஆயிரம் தேனீ: கண்டிக்கும் சமூக வலைதளவாசிகள்

தினகரன்  தினகரன்
பார்த்தாலே பதறியடிக்குது...கர்ப்பிணி வயிற்றில் 10 ஆயிரம் தேனீ: கண்டிக்கும் சமூக வலைதளவாசிகள்

வாஷிங்டன்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கர்ப்பிணிப் பெண் பெத்தானி கருலக்-பேக்கர். இவர், தேனீக்களை வளர்த்து வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் கர்ப்பிணியான அந்த பெண், தனது மகப்பேறு போட்டோஷூட்டுக்காக எடுத்த புகைப்படம் ஒன்றை, தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில், அந்த கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் ஆயிரக்கணக்கான தேனீக்களை மொய்க்கச் செய்து போட்டோ எடுத்துள்ளனர். மேலும், அவரது கணவர் அவருக்கு முத்தமிடும் படத்தையும் ெவளியிட்டுள்ளார். இந்த படத்தை பார்க்கும் போது ஒரு நொடியாவது மனதை அதிரச் செய்கிறது. இதுகுறித்து பெத்தானி கருலக்-பேக்கர் கூறுகையில், ‘இது மிகவும் ஆபத்தானது. தயவுசெய்து அனுபவமும் அறிவும் இல்லாமல், இதனை யாரும் முயற்சி செய்து பார்க்க வேண்டாம். நான் பகிர்ந்து கொள்வதாக உறுதியளித்த எனது மகப்பேறு புகைப்படங்களை இங்கே பதிவிட்டுள்ளேன். கவலைப்பட வேண்டாம். எனது மருத்துவரின் அனுமதி பெற்றே இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது. தோராயமாக 10 ஆயிரம் தேனீக்களை பயன்படுத்தினோம்’ என்று சர்வ சாதாரணமாக சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.ஆனால், சமூகவலைதள வாசிகள், இந்த கர்ப்பிணிப் பெண்ணின் தைரியத்தை பாராட்டியும், சிலர் ஆபத்தான இந்த புகைப்படத்தை வௌியிட்டதை கண்டித்தும், கமெண்ட்டுகளுக்காகவும், லைக்சை பெறுவதற்காகவும் ஏதேதோ குரங்கு வித்தைகளையெல்லாம் செய்கின்றீர் என்றும் திட்டியும் பதிவிட்டுள்ளனர்.

மூலக்கதை