சிறுநீரக கோளாறு, கேன்சர் உள்ளிட்ட நோய்கள் இருப்பவர்களுக்கு கூடுதல் கவனம்; அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

தினகரன்  தினகரன்
சிறுநீரக கோளாறு, கேன்சர் உள்ளிட்ட நோய்கள் இருப்பவர்களுக்கு கூடுதல் கவனம்; அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

சென்னை: ராஜீவ் காந்தி மருத்துவமனை 1,000 படுக்கைகளுடன் சிறப்பாக செயல்படுகிறது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது; ராஜீவ் காந்தி மருத்துவமனையில் படுக்கை வசதியை 2,000-ஆக அதிகரிக்க நடவடிக்கை நோயாளிகள் வசதிக்காக ஆக்சிஜன் பொருத்தப்பட்ட ஊர்திகள் இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது. சிறுநீரக கோளாறு, கேன்சர் உள்ளிட்ட நோய்கள் இருப்பவர்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. தளர்வுகள் இருந்தாலும் சுய கட்டுப்பாடு இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை