கொரோனா பரவலிலும் கொண்டாட்டம்: கிரானைட் குவாரி திறப்பு: விழாவில் ‘கிளுகிளு’ நடனம்: மூணாறு அருகே 48 பேர் கைது

தினகரன்  தினகரன்
கொரோனா பரவலிலும் கொண்டாட்டம்: கிரானைட் குவாரி திறப்பு: விழாவில் ‘கிளுகிளு’ நடனம்: மூணாறு அருகே 48 பேர் கைது

மூணாறு: மூணாறு அருகே கிரானைட் குவாரி திறப்பு விழாவில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி ஆபாச நடனம் நடந்தது. இதில் பங்கேற்ற 48 பேர் கைது செய்யப்பட்டனர். கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் உடும்பன்சோலை பகுதியில் கிரானைட் குவாரியை தமிழ்நாடை சேர்ந்த ஒரு நபர் விலைக்கு வாங்கியுள்ளார். குவாரி திறப்பு விழாவிற்கு பிரபல அரசியல் தலைவர்கள் பங்கேற்க உள்ளதாக விளம்பரப்படுத்தப்பட்டது. இதையடுத்து ராஜபாறை பகுதியில் உள்ள ஒரு சுற்றுலா விடுதியில் குவாரி திறப்பு விழா நிகழ்ச்சி நடந்தது. இதில் கொரோனா விதிமுறைகளை மீறி ஆபாச நடனம் மற்றும் பெல்லி டான்ஸ் போன்றவை அரங்கேறியது. இரவு 8 மணி முதல் காலை 6 மணிவரை நடந்த இந்த நிகழ்ச்சியில் மது அருந்தி முக்கிய தலைவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் பங்கேற்றனர். இதனால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதையறிந்த சாந்தாம்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆபாச நடன நிகழ்ச்சியில் பங்கேற்ற 48 பேரையும் கைது செய்தனர்.

மூலக்கதை