12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.! நீலகிரியில் பலத்த மழை பெய்யும் என தகவல்

தினகரன்  தினகரன்
12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.! நீலகிரியில் பலத்த மழை பெய்யும் என தகவல்

சென்னை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், புதுச்சேரி மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. கோவை, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தேனி, குமரி மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாக 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கனமழை பெய்ய வாய்ப்பு என்று சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

மூலக்கதை