10 மாவட்டங்களில் இன்று மழை உண்டு

தினமலர்  தினமலர்
10 மாவட்டங்களில் இன்று மழை உண்டு


சென்னை : மஹாராஷ்டிரா மற்றும் குஜராத் பகுதியில், பருவ மழை தீவிரம் அடைந்துள்ளதால், அரபிக் கடலின் சில பகுதிகளுக்கு செல்ல, மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.சென்னை வானிலை மையம், நேற்று வெளியிட்ட அறிவிப்பு: நீலகிரி, கோவை, தேனி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலுார், திருப்பத்துார் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில், இன்று லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யும். மற்ற மாவட்டங்களில், சில இடங்களில் லேசான மழை பெய்யலாம். சென்னையில், வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சம், 34 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவாகும்.மத்திய கிழக்கு, வடகிழக்கு அரபிக்கடலில், மணிக்கு, 50 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசுகிறது. குஜராத் கடலோர பகுதியிலும், பலத்த காற்று வீசுவதால், மீனவர்கள், நாளை வரை இரண்டு நாட்களுக்கு, இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.நேற்று காலை, தேவாலா, சின்னக்கல்லார், வால்பாறை, கலசப்பாக்கத்தில், 4 செ.மீ., மழை பெய்துள்ளது. திருப்பத்துார், சோலையாறு, சின்கோனா, செய்யூர், நாகர்கோவில், பெரியாறு, செங்கல்பட்டு, மாமல்லபுரத்தில், 2 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

மூலக்கதை