மகாராஷ்டிராவில் உச்ச நிலையில் கொரோனா....! ஒரே நாளில் மட்டும் 6,555 பேருக்கு பாதிப்பு; இன்று மட்டும் 151 பேர் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
மகாராஷ்டிராவில் உச்ச நிலையில் கொரோனா....! ஒரே நாளில் மட்டும் 6,555 பேருக்கு பாதிப்பு; இன்று மட்டும் 151 பேர் உயிரிழப்பு

மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 6 ஆயிரத்தை  கடந்தது. மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் மட்டும் 6,555 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,06,619- ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 151 பேர் உயிரிழந்த நிலையில் பலியானவர்களின் எண்ணிக்கை 8,822-ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நோய் பாதிப்பு அதிகமான மாநிலங்களில் மகாராஷ்டிரா முன்னிலையில் உள்ளது. மாநிலத்தில் இன்று புதிதாக 6,555 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனால் மாநிலத்தின் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 2,06,619 ஆக அதிகரித்தது. மேலும் 151 பேர் கொரோனா தொற்றால் பலியாகினர். இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 8,822 ஆக உயர்ந்தது. மகாராஷ்டிராவின் இறப்பு விகிதம் 4.27 சதவீதமாக உள்ளது. மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 3,658 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தமாக 1,11,740 பேர் பாதிப்புகளில் இருந்து குணமடைந்துள்ளனர். மாநிலத்தின் மீட்பு விகிதம் 54.8 சதவீதமாக உள்ளது. தற்போது வரை சேகரிக்கப்பட்ட 11,12,442 ஆய்வகங்களில் உள்ள மாதிரிகளில் 2,06,619 பேர் உறுதி செய்யப்பட்டது. தற்போது 6,04,463 பேர் வீட்டு தனிமைப்படுத்துதலில் உள்ளனர். 46,062 பேர் நிறுவனங்கள் மற்றும் பிற பகுதிகளில் தனிமைப்படுத்தலில் உள்ளனர். இதனையொட்டி, மும்பையில் புதிதாக 1,287 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மும்பை நகராட்சியின் மொத்தமாக பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 84,524 ஆக அதிகரித்தது.

மூலக்கதை