பூடானுடன் எல்லை பிரச்னை: சீனா பகிரங்க ஒப்புதல்

தினமலர்  தினமலர்
பூடானுடன் எல்லை பிரச்னை: சீனா பகிரங்க ஒப்புதல்

பீஜிங்: பூடானுடன் எல்லைப் பிரச்னை உள்ளதாக, சீனா முதல் முறையாக ஒப்புக் கொண்டுள்ளது.


லடாக் எல்லையில், சீன ராணுவம் நடத்திய அத்துமீறிய தாக்குதலுக்கு, அமெரிக்கா உட்பட உலகின் பல நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நாடுகள், இந்த விவகாரத்தில், இந்தியாவுக்கு பகிரங்கமாக ஆதரவும் தெரிவித்துள்ளன. இந்தியா மட்டுமின்றி, அண்டை நாடுகள் அனைத்துடனும், சீனாவுக்கு எல்லை உட்பட பல்வேறு பிரச்னைகள் உள்ளன. குறிப்பாக, பூடானை ஆக்கிரமிக்க சீனா தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இந்நிலையில், பூடானுடன் எல்லை பிரச்னை உள்ளதாக, சீனா முதல்முறையாக தெரிவித்துள்ளது.

இது பற்றி சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சீனா - பூடான் இடையேயான எல்லை, இதுவரை, சரியாக வரையறுக்கப்படவில்லை. அதனால். பூடானுடன் எல்லை பிரச்னை,நீண்டகாலமாக உள்ளது.இந்த பிரச்னைக்கு தீர்வு காண, 1984 முதல், 2016ம் ஆண்டு வரை, 24 முறை, சீனாவும், பூடானும் பேச்சு நடத்தியுள்ளன. இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் திட்டங்களை, சீனா வைத்துள்ளது. இந்த பிரச்னையில், மூன்றாவது நாடு தலையிட தேவையில்லை; சீனாவை குற்றம்சாட்டவும் உரிமையில்லை. இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை