கொரோனா சிகிச்சை மையம் ரெடி: இன்று முதல் பயன்பாட்டுக்கு அனுமதி

தினமலர்  தினமலர்
கொரோனா சிகிச்சை மையம் ரெடி: இன்று முதல் பயன்பாட்டுக்கு அனுமதி

கோவை:கொடிசியாவில் அமைக்கப்பட்டுள்ள, கொரோனா சிறப்பு சிகிச்சை மையம், இன்று முதல் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படவுள்ளது. கோவையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பின் தாக்கம் அதிகரித்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 17000 படுக்கை வசதிகள், கோவை மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதன் ஒரு பகுதியாக, முதல்கட்டமாக கொடிசியா வர்த்தக வளாகத்தில், 400 படுக்கை வசதிகளுடன் பிரத்யேக மையம் அமைக்கப்பட்டுள்ளது. அவசியம் எனில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்த போதுமான இடங்கள் இங்கு உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இம்மையம் முழுவதும், நேற்று துாய்மைப்படுத்தப்பட்டு, படுக்கை வசதி தயார் செய்யப்பட்டது.
கலெக்டர் ராஜாமணியிடம் கேட்டபோது, ''கொடிசியா மையத்தில் வசதிகள் அனைத்தும் தயார்நிலையில் உள்ளன. நாளை (இன்று) முதல், கொரோனா பாதிக்கப்பட்டு எவ்வித அறிகுறியும் இன்றி இருக்கும் 'ஏ' அறிகுறியாளர் என்று கூறப்படுபவர்கள் மட்டும் இம்மையத்திற்கு மாற்றப்படுவார்கள். இம்மையத்திற்கு பிரத்யேக மருத்துவக்குழுவும் நியமிக்கப்பட்டுள்ளனர்,'' என்றார்.

மூலக்கதை