பிரசாந்த் கிஷோரை எதிர்த்து திமுக எம்.பி.,க்கள் தனி கோஷ்டி?

தினமலர்  தினமலர்
பிரசாந்த் கிஷோரை எதிர்த்து திமுக எம்.பி.,க்கள் தனி கோஷ்டி?

சென்னை: கோஷ்டி என்றாலே, அரசியல்வாதிகளுக்கு நினைவிற்கும் வருவது, காங்கிரஸ் தான். ஆனால், இப்போது மற்ற கட்சிகளிலும், ஏகமாக கோஷ்டிகள் உருவாகிவிட்டன. இப்படி, தி.மு.க.,விலும், ஐந்து எம்.பி.,கள் தனி கோஷ்டியாக செயல்படுவதாக சொல்லப்படுகிறது. இவர்கள் தங்களுக்கென்றே, தனி, 'வாட்ஸ் ஆப்' குழுவையும் ஏற்படுத்தியுள்ளனராம். இதன் மூலம், டில்லி அரசியல் மற்றும் தமிழக அரசியல் தகவல் பரிமாற்றங்கள் நடைபெறுகிறதாம். சில சமயம், 'குரூப் வீடியோ கால்' மூலமாகவும் பேசிக் கொள்கின்றனராம்.

இவர்கள், தலைவர் ஸ்டாலினிடமிருந்து, சற்று ஒதுங்கியே இருக்கும் கோஷ்டியாம். சமீபத்தில், ஸ்டாலின் தன் கட்சியினருடன், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பேசிய போது, இந்த கோஷ்டியிலிருந்து சிலர், அதில் கலந்து கொள்ளவில்லையாம். கட்சிக்குள் இளைஞர்களுக்கு பதவி தர வேண்டும் என்பது உட்பட, பல முக்கிய அம்சங்களை வலியுறுத்தி, விரைவில் ஸ்டாலினை சந்திக்கஉள்ளதாம், இந்த கோஷ்டி.

'கட்சிக்கு உதவுவதும், பல ஆலோசனைகளை கூறுவதும் தான் இவர்களின் குறிக்கோள்; கட்சிக்கு எதிராக செயல்படுவது அல்ல. அடுத்த ஆண்டு தேர்தலில், ஆட்சியை தி.மு.க., பிடிக்க, பல அதிரடி திட்டங்களை தலைவரிடம் சொல்லவிருக்கின்றனர்' என்கின்றனர், தி.மு.க.,வினர். ஸ்டாலின் நியமித்த அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரை எதிர்த்து, இந்த கோஷ்டி செயல்பட்டு வருகிறது என்கின்றனர், அக்கட்சியில் விபரம் தெரிந்தவர்கள்.

மூலக்கதை