பாக். மருத்துவர்கள் 48 பேர் ராஜினாமா

தினகரன்  தினகரன்
பாக். மருத்துவர்கள் 48 பேர் ராஜினாமா

லாகூர்: பாகிஸ்தானில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகின்றது. நேற்று வரை 2,28,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்னர். 4,700 பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவ பணிகளில் ஈடுபட்டு இருந்த 70 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் மருத்துவர்கள். இந்நிலையில், மருத்துவர்கள், நர்சுகள் போன்றவர்கள் அணியும் பிபிஇ கிட் போன்ற மருத்துவ பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை எனக்கூறி பஞ்சாப் மாகாணத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் 48 மருத்துவர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.

மூலக்கதை