ஆர்மீனியாவில் கால்பந்து விளையாட்டில் முறைகேடு வீரர்கள், கிளப்களுக்கு ஆயுள்தடை

தினகரன்  தினகரன்
ஆர்மீனியாவில் கால்பந்து விளையாட்டில் முறைகேடு வீரர்கள், கிளப்களுக்கு ஆயுள்தடை

ஆயெரவன்: உள்ளூர் போட்டிகளில் முறைகேட்டில் ஈடுபட்ட கால்பந்து வீரர்கள், அலுவலர்கள், கிளப் உரிமையாளர்கள் என 45 பேருக்கு ஆர்மீனிய கால்பந்து சங்கம் அதிரடியாக  ஆயுட்கால தடை விதித்துள்ளது. ஆசிய நாடாக இருந்தாலும், ஐரோப்பிய எல்லையில் இருப்பதால் ஆர்மீனியாவில்  கால்பந்து விளையாட்டுக்கு வரவேற்பு அதிகம். அதனால் அங்கு ஏராளமான கால்பந்து கிளப்கள் உள்ளன. இந்த கிளப்களுக்கு இடையே ஆண்டுதோறும் நடைபெறும் முதல் டிவிஷன், 2வது டிவிஷன் கால்பந்து போட்டிகள் அங்கு மக்களிடையே பிரபலமான போட்டிகளாகும்.இந்நிலையில், 2வது டிவிஷன் போட்டிகளில் மேட்ச் பிக்சிங் முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன. அதில் ஆர்மீனிய கால்பந்து சங்கம் (எப்எப்ஏ) அதிகம் ஆர்வம் காட்டாமல் இருந்தது. டப்பு சீசனுக்கான 2வது டிவிஷன்  போட்டியில் லேகோமோடிவ் யெரவன் அணி மற்ற அணிகளான எப்சி வேன், அரகெட்ஸ், டோர்பெடோ யெரவன், மாசிஸ் ஆகியவற்றுடன் மோதிய ஆட்டங்களின் முடிவுகள் 12-0, 0-12, 1-8, 9-2, , 0-7, 0-8, 8-2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் ஒருசார்பாக இருந்தது விமர்சனங்களை எழுப்பியது. இதைத் தொடர்ந்து 2வது டிவிஷன் போட்டிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதுடன், இந்த கிளப்களும் போட்டியில் இருந்து நீக்கப்பட்டன. விசாரைணயில் மேட்ச் பிக்சிங் முறைகேடு நடந்தது உறுதி செய்யப்பட்டது. இதில் தொடர்புடைய வீரர்கள், பயிற்சியாளர்கள், ஊழியர்கள், கிளப் உரிமையாளர்கள் என 45 பேருக்கு ஆயுட்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. கிளப்களின் உரிமையாளர்கள், வீரர்கள் பெரும்பாலும் ரஷ்யா, உக்ரைன், லாத்வியா, பெலாரஸ் நாட்டுக்காரர்கள். கால்பந்து வரலாற்றில் இத்தனை வீரர்கள், கிளப்களுக்கு ஆயுட்கால தடை விதிக்கப்பட்டது இதுவே முதல்முறை.

மூலக்கதை