இந்தியாவை அமெரிக்கா நேசிக்கிறது: வாழ்த்து தெரிவித்த மோடிக்கு அதிபர் டிரம்ப் டுவிட் பதில்

தமிழ் முரசு  தமிழ் முரசு
இந்தியாவை அமெரிக்கா நேசிக்கிறது: வாழ்த்து தெரிவித்த மோடிக்கு அதிபர் டிரம்ப் டுவிட் பதில்

வாஷிங்டன்: அமெரிக்கா இந்தியாவை நேசிப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் டிவிட்டரில் கருத்து பதிந்துள்ளார். அமெரிக்க நாட்டின் 244ம் சுதந்திர தின விழா நேற்று கொண்டாடப்பட்டது.

இதையொட்டி உலகின் பல தலைவர்களும், அந்நாட்டு அதிபர் டிரம்புக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர். இந்தியப் பிரதமர் மோடி டிவிட்டரில், ‘அமெரிக்காவின் 244ம் சுதந்திர தினத்தை முன்னிட்டு அதிபர் டிரம்ப் மற்றும் அந்நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்கள்’ என்று பதிவிட்டிருந்தார்.அதற்குப் பதிலாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது டிவிட்டரில், ‘நன்றி நண்பரே. இந்தியாவை அமெரிக்கா நேசிக்கிறது’ எனப் பதிந்துள்ளார்.

சீன - இந்தியா மோதல் வலுத்து வரும் நிலையில் அமெரிக்கா இவ்வாறு பதிந்துள்ளது குறிப்பிடத்தக்கது என அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

.

மூலக்கதை