இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் விகிதம் 60.77% : மத்திய அரசு

தினகரன்  தினகரன்
இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் விகிதம் 60.77% : மத்திய அரசு

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் விகிதம் 60.77% ஆக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் மொத்தம் 4,09,082 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\r நாட்டில் மொத்தம் 1,100 கொரோனா பரிசோதனை நிலையங்களில் 786 அரசு ஆய்வகங்களும், 314 தனியார் ஆய்வகங்களும் உள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 2,48,934 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை நாட்டில் மொத்தம் 97,89,066 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.\r இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 லட்சத்து 73 ஆயிரத்தை தாண்டியது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீயாக பரவி வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 24,850 பேர் புதிதாக  பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் இதுவரை 19,268 பேர் உயிரிழந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 613  உயிரிழந்துள்ளனர். இதுவரை 4,09,082 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 14,856 பேர் குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

மூலக்கதை