வந்தே பாரத் திட்டத்தின் கீழ் அமெரிக்காவுக்கு 36 விமானங்கள் இயக்க முடிவு: ஏர் இந்தியா நிறுவனம் அறிவிப்பு

தினகரன்  தினகரன்
வந்தே பாரத் திட்டத்தின் கீழ் அமெரிக்காவுக்கு 36 விமானங்கள் இயக்க முடிவு: ஏர் இந்தியா நிறுவனம் அறிவிப்பு

டெல்லி: ஜூலை 11 முதல் 19 வரை இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு 36 விமானங்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வந்தே பாரத் திட்டத்தின் கீழ் அமெரிக்காவுக்கு 36 விமானங்கள் இயக்கப்படும் என்று ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. அமெரிக்கா செல்பவர்கள் ஏர் இந்தியா இணையதள முகவரியில் டிக்கெட்டுகளை பதிவு செய்துக்கொள்ளலாம்.\r விமான டிக்கெட் முன்பதிவானது நாளை முதல் தொடங்க உள்ளது. நியூயார்க், சிகாகோ மற்றும் சான் பிரான்சிஸ்கோ செல்ல டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என்று ஏர் இந்தியா நிறுவனம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.\r முன்னதாக ஜூன் 22 அன்று அமெரிக்க போக்குவரத்துத் துறை, ஏர் இந்தியாவை இந்தியாவுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் ஜூலை 22 முதல் அதன் முன் அனுமதியின்றி இயக்கப்படுவதைத் தடைசெய்துள்ளதாக அறிவித்திருந்தது. இந்திய அரசு அமெரிக்க விமானங்களை இயக்க அனுமதிக்காததற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இரு நாடுகளுக்கும் இடையில் தடை விதிக்கப்பட்டிருந்தது.\r எனவே, ஜூன் 23 அன்று, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் \'தனிப்பட்ட இருதரப்பு குமிழ்களை\' நிறுவுவது குறித்து பரிசீலித்து வருவதாக விமான போக்குவரத்து அமைச்சகம் கூறியது.\r வந்தே பாரத் மிஷனின் நான்காவது கட்டம் ஜூலை 3 முதல் தொடங்கியது.வெளியுறவு அமைச்சகம் பகிர்ந்துள்ள தரவுகளின்படி, சுமார் 1.50 லட்சம் இந்தியர்களை அழைத்துவரும் பணியின் கீழ் 700 க்கும் மேற்பட்ட விமானங்கள் இந்தியாவை அடைந்துள்ளன.\r இந்த பயணத்தின் நான்காவது கட்டத்தின் கீழ், கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, கென்யா, இலங்கை, பிலிப்பைன்ஸ், கிர்கிஸ்தான், சவுதி அரேபியா, பங்களாதேஷ், தாய்லாந்து, தென்னாப்பிரிக்கா, ரஷ்யா, ஆஸ்திரேலியா, மியான்மர், ஜப்பான், உக்ரைன் மற்றும் வியட்நாம் ஆகியவற்றுடன் இந்தியாவை இணைக்கும் 170 விமானங்களை ஏர் இந்தியா நடத்தவுள்ளது. \r கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்து ஏறக்குறைய இரண்டு மாத இடைநீக்கத்திற்குப் பிறகு, அரசு மே 25 முதல் திட்டமிடப்பட்ட உள்நாட்டு பயணிகள் விமானங்களை மீண்டும் தொடங்கியது. ஆனால் குறைக்கப்பட்ட முறையில் மற்றும் விமான கால அளவைப் பொறுத்து குறைந்த மற்றும் உயர் வரம்புகளை நிர்ணயித்து இயக்கி வருகிறது.

மூலக்கதை