பாக்.,கில் 2.25 லட்சம் பேர் பாதிப்பு

தினமலர்  தினமலர்
பாக்.,கில் 2.25 லட்சம் பேர் பாதிப்பு

பாக்.,கில் 2.25 லட்சம் பேர் பாதிப்பு

இஸ்லாமாபாத்: அண்டை நாடான பாகிஸ்தானில், நேற்று, 3,387 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, நாட்டில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, இரண்டு லட்சத்து, 25 ஆயிரத்து, 283 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும், 68 பேர் இறந்துள்ள நிலையில், பலியானோர் எண்ணிக்கை, 4,619 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில், 90 ஆயிரத்து, 721 பேருடன், சிந்து மாகாணம் முதலிடத்தில் உள்ளது.

மரண தண்டனை கைதிகள் பலி

சேக்ரமென்டோ: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சான் குவென்டின் சிறையில் இருந்த, மரண தண்டனை கைதிகள் ஸ்காட் எர்ஸ்கைன் மற்றும் மானுவல் மச்சாடோ அல்வாரெஸ் ஆகியோர், கொரோனா தாக்குதலால், நேற்று முன்தினம் இறந்தனர். இச்சிறையில், 40 சதவீத கைதிகள், வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். கலிபோர்னியா மாகாண சிறைகளில், இதுவரை, 24 கைதிகள், வைரஸ் தொற்றால் இறந்துள்ளனர்.

நாய்க்கு கொரோனா

அட்லான்டா: ஆசிய நாடான ஜார்ஜியாவில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவரின் வீட்டில் இருந்த, ஆறு வயது கலப்பின நாய்க்கும், வைரஸ் தொற்று இருந்ததை, டாக்டர்கள் உறுதி செய்தனர். அந்த நாய், நரம்பியல் நோய்களால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததால், கருணைக்கொலை செய்யப்பட்டது. முன்னதாக, அமெரிக்காவில் ஒரு நாயிடம், வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது

.துப்பாக்கிச் சூட்டில் சிறுவன் பலி

ஹூவர்: அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் உள்ள ஒரு ஷாப்பிங் மாலில், நேற்று முன்தினம் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில், எட்டு வயது சிறுவன் கொல்லப்பட்டான். சிறுமி உள்ளிட்ட மூவர், காயமடைந்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

சாலை விபத்தில் 5 பேர் பலி

ஷார்லெட்: அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தின் வடக்கு ஷார்லெட்டில் உள்ள நெடுஞ்சாலையில், நேற்று முன்தினம் மாலை நடந்த விபத்தில், ஐந்து பேர் பலியாயினர். முன்று பேர், பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் சிக்கியவர்களை, அடையாளம் காணும் பணிகள் நடப்பதாக போலீசார் கூறினர்.

மூலக்கதை