விழுப்புரத்தை தொடர்ந்து 5 மாவட்டங்களில் பிரெண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடை

தினகரன்  தினகரன்
விழுப்புரத்தை தொடர்ந்து 5 மாவட்டங்களில் பிரெண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடை

விழுப்புரம்: விழுப்புரத்தை தொடர்ந்து 5 மாவட்டங்களில் பிரெண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சாத்தான்குளம் தந்தை -மகன் கொலை வழக்கில் பிரெண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தொடர்பு இருப்பதாக புகார் எழுந்தநிலையில், இதற்கு தடை விதிக்க கோரிக்கை எழுந்துள்ளது. இந்நிலையில், முதலில் விழுப்புரம் மாவட்டத்தில் பிரெண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடை விதித்து மாவட்ட எஸ்.பி. ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து, திருச்சி, கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் ஆகிய 5 மாவட்டங்களில் பிரெண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை