நடிகர் விஜய் வீட்டிற்கு மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்; போலீசார் விசாரணை

தினகரன்  தினகரன்
நடிகர் விஜய் வீட்டிற்கு மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்; போலீசார் விசாரணை

சென்னை: நடிகர் விஜய் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்மநபர் தொலைபேசியில் மிரட்டல் விடுத்துள்ளார். சாலிகிராமம் மற்றும் விருகம்பாக்கத்தில் உள்ள விஜய்க்கு சொந்தமான வீடுகளில் மோப்பநாய் உதவியுடன் சோதனை நடத்தினர். சோதனையின்போது வெடிகுண்டு எதுவும் சிக்காததால் தொலைபேசியில் பேசிய மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை