அறிவிப்பு! புதுச்சேரியில் அதிகரிக்கும் நோய் தொற்றுகளால்....கொரோனா பாதித்த 10 வீதிகள் கட்டுப்பாட்டு மண்டலமாக

தினமலர்  தினமலர்
அறிவிப்பு! புதுச்சேரியில் அதிகரிக்கும் நோய் தொற்றுகளால்....கொரோனா பாதித்த 10 வீதிகள் கட்டுப்பாட்டு மண்டலமாக

புதுச்சேரி : புதிதாக 10 வீதிகள் கட்டுபாட்டு மண்டலமாக மாற்றப்பட்டு போலீஸ் கட்டுபாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இது குறித்து கலெக்டர் அருண் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு;புதுச்சேரியில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து 10 வீதிகள் கட்டுப்பாட்டு மண்டலமாக மாற்றப்பட்டுள்ளன.இதன்படி எல்லைப்பிள்ளைச்சாவடி மோகன் நகர் 3-வது குறுக்கு தெரு, மூலக்குளம் ஆதிகேசவன் நகர் 4-வது குறுக்கு தெரு, மேரி உழவர்கரை சக்தி நகர் 2-வது குறுக்கு தெரு, தட்டாஞ்சாவடி கல்கி நகர் 3-வது குறுக்கு தெரு.தட்டாஞ்சாவடி தர்மாபுரி புரட்சி தலைவி நகர் 2-வது குறுக்கு தெரு, கருவடிக்குப்பம் நெசவாளர் நகர் கலைமகள் வீதி, கரியமாணிக்கம் மடுகரை முதன்மை சாலை, காமராஜர் நகர் முதல் குறுக்கு தெரு, கிருமாம்பாக்கம் திரவுபதியம்மன் கோவில் தெரு, பாகூர் கூட்டுறவு நகர் ஒரு பகுதி ஆகிய வீதிகள் கட்டுபாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்பகுதிகளில் வாகன நடமாட்டம் , பொதுபோக்குவரத்து,பொதுமக்கள் நடமாட்டம் தடை செய்யப்படுகிறது. கட்டுப்பாட்டு மண்டல பகுதிகளை இணைக்கும் அனைத்து சாலைகளும் போலீஸ் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு, நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.அத்தியாவசிய பொருட்கள் வினியோகம், அவசர மருத்துவ சேவைக்காக மட்டுமே பொதுமக்கள் நடமாட்டம் அனுமதிக்கப்படுகிறது.இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை