அபாயம்! சேறும் சகதியுமான சாலையால் ...தொற்று நோய் எளிதில் பரவும்

தினமலர்  தினமலர்
அபாயம்! சேறும் சகதியுமான சாலையால் ...தொற்று நோய் எளிதில் பரவும்

விருத்தாசலம் : எ.வடக்குப்பம் பிள்ளையார் கோவில் தெருவில், மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளதால், அப்பகுதி மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

விருத்தாசலம் அடுத்த எருமனுார் ஊராட்சி, எ.வடக்குப்பம் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இக்கிராமத்தில் உள்ள பிள்ளையார் கோவில் தெருவில், கழிவுநீர் கால்வாய்கள் துார்ந்துபோய் உள்ளது. இதனால், குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது.மேலும், மழைக்காலங்களில் தண்ணீர் வெளியேற வழி இல்லாததால், சாலை முழுவதும் சேறும் சகதியுமாக உள்ளது. இதனால், அப்பகுதி மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கழிவுநீர் கால்வாய்களை துார்வாரி, சாலையில் தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்ற, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மூலக்கதை