பயிற்சி போட்டி ‘டிரா’ | ஜூலை 04, 2020

தினமலர்  தினமலர்
பயிற்சி போட்டி ‘டிரா’ | ஜூலை 04, 2020

சவுத்தாம்ப்டன்: இங்கிலாந்தின் பட்லர், ஸ்டோக்ஸ் அணிகள் மோதிய 3 நாள் பயிற்சி போட்டி ‘டிரா’ ஆனது.

இங்கிலாந்து சென்றுள்ள விண்டீஸ் அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வரும் 8ல் சவுத்தாம்ப்டனில் துவங்குகிறது. இதற்கு தயாராகும் வகையில் இங்கிலாந்து வீரர்கள் பட்லர், ஸ்டோக்ஸ் தலைமையில் இரு அணிகளாக பிரிந்து 3 நாள் பயிற்சி போட்டியில் விளையாடினர்.

சவுத்தாம்ப்டனில் நடந்த இப்போட்டியின் முதல் இன்னிங்சில் பட்லர் அணி 287/5 (‘டிக்ளேர்’), ஸ்டோக்ஸ் அணி 233 ரன்கள் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் பட்லர் அணி 6 விக்கெட்டுக்கு 200 ரன்கள் எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது.

பின், 255 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை துவக்கிய ஸ்டோக்ஸ் அணி 3ம் நாள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 157 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் ஸ்டோக்ஸ் (33) அவுட்டாகாமல் இருந்தார். பட்லர் அணி சார்பில் மாட் பார்கின்சன் 2 விக்கெட் வீழ்த்தினார்.

இதனையடுத்து இப்போட்டி ‘டிரா’ என அறிவிக்கப்பட்டது.

மூலக்கதை