மொயீனுக்கு இடமில்லை: இங்கிலாந்து அணி அறிவிப்பு | ஜூலை 04, 2020

தினமலர்  தினமலர்
மொயீனுக்கு இடமில்லை: இங்கிலாந்து அணி அறிவிப்பு | ஜூலை 04, 2020

லண்டன்: விண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டில் விளையாடும் இங்கிலாந்து அணியில் மொயீன் அலி, பேர்ஸ்டோவ் தேர்வு செய்யப்படவில்லை.

இங்கிலாந்து சென்றுள்ள விண்டீஸ் அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வரும் 8ல் சவுத்தாம்ப்டனில் துவங்குகிறது. இப்போட்டிக்கான 13 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டது.

இதில் ‘சுழல்’ வீரர் மொயீன் அலி, விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோவ் தேர்வு செய்யப்படவில்லை. விண்டீஸ் தொடருக்கான 30 பேர் கொண்ட பயிற்சி அணிக்கு தேர்வான இவர்களை, 9 பேர் அடங்கிய மாற்று வீரர்கள் பட்டியலில் கூட சேர்க்கவில்லை.

இளம் சுழற்பந்துவீச்சாளர் டொமினிக் பெஸ் 22, இடம் பிடித்துள்ளார். ‘ரெகுலர்’  கேப்டன் ஜோ ரூட் விலகியதால், ‘ஆல்–ரவுண்டர்’ பென் ஸ்டோக்ஸ் அணியை வழிநடத்துகிறார்.

இங்கிலாந்து அணி: பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜோப்ரா ஆர்ச்சர், டொமினிக் பெஸ், ஸ்டூவர்ட் பிராட், ரோரி பர்ன்ஸ், ஜாஸ் பட்லர், ஜாக் கிராவ்லி, ஜோ டென்லி, போப், டாம் சிப்லி, கிறிஸ் வோக்ஸ், மார்க் உட்.

மூலக்கதை