சிறந்த கேப்டன் கங்குலி: சொல்கிறார் வாசிம் ஜாபர் | ஜூலை 04, 2020

தினமலர்  தினமலர்
சிறந்த கேப்டன் கங்குலி: சொல்கிறார் வாசிம் ஜாபர் | ஜூலை 04, 2020

மும்பை: ‘‘சிறந்த கேப்டனாக கங்குலியை தேர்வு செய்கிறேன்,’’ என, வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் துவக்க வீரர் வாசிம் ஜாபர் 42. மும்பையை சேர்ந்த இவர், மொத்தம் 31 டெஸ்டில் (1,944 ரன்கள்) விளையாடி உள்ளார். தவிர இவர், ரஞ்சி கோப்பையில் அதிக ரன்கள் (12,038) குவித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். கடந்த 2000ம் ஆண்டு டெஸ்டில் அறிமுகமான இவர், சச்சின் (11 டெஸ்ட்), டிராவிட் (15), கங்குலி (5) ஆகியோரது தலைமையின் கீழ் விளையாடி உள்ளார்.

இவர்கள் மூவரில் சிறந்த கேப்டன் யார் என்ற கேள்விக்கு வாசிம் ஜாபர் கூறியது: நான் விளையாடிய கேப்டன்களில் கங்குலியை சிறந்தவராக கருதுகிறேன். ஏனெனில் கடந்த 2000க்கு பின், சிறந்த அணியை உருவாக்கினார். இளம் வீரர்களுக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு வழங்கி ஆதரவு தந்தார்.

சேவக்கை சிறந்த துவக்க வீரராக மாற்றிய பெருமை கங்குலியை சேரும். இதேபோல ஜாகிர் கான், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் போன்ற திறமையான வீரர்களை அணிக்கு கொண்டு வந்தார்.

இவ்வாறு ஜாபர் கூறினார்.

மூலக்கதை