உலகம் சந்திக்கும் பிரச்னைகளுக்கு புத்தரின் கொள்கையில் தீர்வு

தினமலர்  தினமலர்
உலகம் சந்திக்கும் பிரச்னைகளுக்கு புத்தரின் கொள்கையில் தீர்வு

புதுடில்லி:''உலகம் இப்போது சந்திக்கும் பிரச்னைகளுக்கு புத்தரின் கொள்கைகள் தீர்வாக உள்ளன'' என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.நேற்று ஆஷாத பவுர்ணமி தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நாள் குரு பூர்ணிமா தினம் என்றும் அழைக்கப்படுகிறது.இந்நாளில் ஹிந்துக்கள் தங்களின் குருவை வழிபட்டு அவருக்கு காணிக்கை செலுத்தும் தினமாக கடைப்பிடிக்கின்றனர்.பவுத்தர்கள் இந்த நாளை தர்மசக்கர தினமாக கொண்டாடுகின்றனர்.


வீடியோ கான்பரன்ஸ்



இதையொட்டி ஐ.பி.சி. எனப்படும் சர்வதேச புத்த மத கூட்டமைப்பு மத்திய கலாச்சார அமைச்சகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக துவக்கிவைத்தார்.நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடிவீடியோ கான்பரன்ஸ்வழியாக பேசியதாவது:ஆஷாத பூர்ணிமாவுக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவித்து கொள்கிறேன். இது குரு
பூர்ணிமா என்றும்அழைக்கப்படுகிறது.நமக்கு அறிவு கொடுத்த நமது குருக்களை ஆசான்களை நினைவில் கொள்ள வேண்டிய நாள் இது. அந்த உணர்வில் நாம் புத்தருக்கு மரியாதை செலுத்துகிறோம். பல சமூகங்களை நாடுகளை நல்வழிப்படுத்தும் வழிகளை கவுதம புத்தர் நமக்கு காட்டியுள்ளார்.புத்தரின் கொள்கைகளில் மிகவும் முக்கியமானது அன்பும் சகிப்புத்தன்மையும் தான். சிந்தனையிலும் செயலிலும்
எளிமையை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் புத்தர்வலியுறுத்தியுள்ளார்.இன்றைய உலகம் பல சவால்களைச் சந்தித்து வருகிறது இதற்கான தீர்வுகள் கவுதம புத்தரின் உயரிய கொள்கைகளில்உள்ளன.கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என எந்தக் காலத்துக்கும் தீர்வாக புத்தரின் கொள்கைகள் அமைந்துள்ளன.பவுத்தம் மரியாதையைக் கற்பிக்கிறது. மக்களுக்கான மரியாதை, ஏழைகளுக்கான மரியாதை, பெண்களுக்கான மரியாதை, அமைதி
மற்றும் அகிம்சைக்கான மரியாதை ஆகியவற்றைபுத்தர் கற்பித்துள்ளார்.

பிரச்னைகளுக்கு தீர்வு



பூமியைக் காப்பாற்ற உதவும் தத்துவங்கள் பவுத்தத்தில் நிறைய உள்ளன. இந்த 21ம் நுாற்றாண்டு பற்றி நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன். இந்த நம்பிக்கை என் இளம் நண்பர்களிடமிருந்துவருகிறது.நம் நாட்டின் இளைஞர்களிடம் நம்பிக்கை புதியன புகுத்தல் பரிவு ஆகியவற்றைப் பார்க்க வேண்டுமென்றால் இளைஞர்களின் வழிநடத்தலில் துவக்கப்பட்டுள்ள 'ஸ்டார்ட்-அப்' துறையை நாம் பார்க்க வேண்டும்.

பிரகாசமான இளம் மனங்கள் உலகளாவிய பிரச்னைகளுக்கு தீர்வு காண்கின்றன.பகவான் புத்தரின் சிந்தனைகளுடன் தொடர்புபடுத்திக் கொள்ளுங்கள் என இளைஞர்களை கேட்டுக் கொள்கிறேன். அவை நம்மை ஊக்கப்படுத்தி முன்னேறிச் செல்ல உதவும்.இந்தியாவில் உள்ள பவுத்த மதம் தொடர்பான நினைவு சின்னங்களுடன் அதிக மக்களை ஒன்றிணைக்க வேண்டும். என்னுடைய லோக்சபா தொகுதியில் தான் பவுத்த மதத்தின் மிகவும் புண்ணிய ஸ்தலமான சாரநாத் உள்ளது.புத்தரின் சிந்தனைகள் நமக்கு பிரகாசம் அளிக்கட்டும். ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் வழங்கட்டும். அவரது சிந்தனைகள் நம்மைநல்வழிப்படுத்தட்டும்.இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

மூலக்கதை