அவ்ளோ ஊசி மருந்துகளும் லபக் இதென்ன சின்னபுள்ளத்தனம்: டிரம்ப் முடிவுக்கு மற்ற நாடுகள் கடுப்பு

தினகரன்  தினகரன்
அவ்ளோ ஊசி மருந்துகளும் லபக் இதென்ன சின்னபுள்ளத்தனம்: டிரம்ப் முடிவுக்கு மற்ற நாடுகள் கடுப்பு

வாஷிங்டன்: எந்த ஒரு விஷயத்திலும் தனக்கு என்று ‘லபக்’கி விட்டு தான் மற்ற நாடுகளுக்கு தானம் செய்யும் ஆதிக்க பழக்கம் அமெரிக்காவுக்கு  உண்டு. கொரோனா மருந்து விஷயத்திலும் இதை கடைபிடிப்பதால் ஐரோப்பிய நாடுகள் கடுப்பாகி விட்டன. சீனாவை தொடர்ந்து இத்தாலி, ஜப்பான்,  ஸ்வீடன் போன்ற நாடுகளில் கொரேனா வேகமாக பரவியது. ஆரம்பத்தில் மருந்து இல்லாமல் தவித்த அமெரிக்க  அதிபர் டிரம்ப், இந்தியாவில் இருந்து  ஹைட்ராக்சிக்ளோரோகுயின் மருந்தை வாங்கி குவித்தார். சப்ளை அனுப்ப தாமதம் ஆனதற்கு கடுப்பான டிரம்ப், நேரடியாக எச்சரிக்கை விடுத்து  குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், தொடர்ந்து கொரோனா பரவிக்கொண்டிருந்ததால், அமெரிக்க மருந்து கம்பெனிகள், ஏற்கனவே ஹெபடைட்டீஸ் நோய்க்கு சிகிச்சை  அளிக்க தயாரிக்கப்பட்டிருந்த மருந்துகளை ஆய்வு செய்ய துவங்கின. பிரபல அமெரிக்க மருந்து தயாரிப்பு கம்பெனி கிலீட் சயின்சஸ், கொரோனா  வைரஸ் பாதித்த நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் என்ற மருந்தை கண்டுபிடித்தது. ஆய்வு செய்தபோது நல்ல பலன் கிடைத்ததால், இதை விற்க  தயாரானது. அமெரிக்க அரசின் மருந்து கட்டுப்பாட்டு துறை இதற்கு பச்சை கொடி காட்டியது.   மேலும், இந்த மருந்தை ஊசி மூலம் செலுத்தினால்  பலன் கிடைப்பதை அறிந்து டிரம்ப்புக்கு தகவல் சென்றது. அவர் உடனே, 5 லட்சம் ஊசி மருந்துகளுக்கு ஆர்டர் கொடுத்து விட்டார். இந்த மருந்துகளை தயாரிக்க இந்த கம்பெனிக்கு செப்டம்பர் மாதம் வரை  ஆகும். அதுவரை தன் மருந்து தயாரிப்பு அனைத்தையும் அமெரிக்க மருத்துவமனைகளுக்கு தான் சப்ளை செய்ய முடியும். ஏற்கனவே இந்த மருந்தை  ஜப்பான், ஸ்வீடன், தென் கொரியா போன்ற நாடுகள் பயன்படுத்தி வந்தன. அதனால், அமெரிக்க  மருந்து கம்பெனியிடம் இந்த நாடுகளும் ஆர்டர்   கொடுத்தன. ஆனால், செப்டம்பர் வரை 10 சதவீதம் வரை தான் சப்ளை செய்ய முடியும்.அதன் பின் தான் அதிகமாக சப்ளை செய்ய முடியும் என்று  கம்பெனி கூறிவிட்டது. இந்த ஊசி மருந்தை அமெரிக்கா பெரிய அளவில் ஆர்டர் தந்தது அறிந்து மற்ற நாடுகள் கடுப்பாயின. அமெரிக்கா எதிலும் தனக்கென கையிருப்பு  வைத்து கொண்டு தான் மற்ற நாடுகளுக்கு அளிக்கும் சுபாவம் கொண்டது என்பதை இந்த நெருக்கடியான நேரத்திலும் தன் சுயரூபத்தை காட்டி  விட்டதே என்று பல  நாடுகளும் கடுப்பில் உள்ளன.தவியாய் தவிக்கும் டிரம்ப்அமெரிக்காவில் பல மருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர் டாக்டர்கள்.  அதில் ஒன்று தான் ரெம்டெசிவிர். இதை நேடியாக நரம்பில் ஊசி மூலம்  செலுத்த வேண்டும். அப்படி செலுத்தினால், பரவும் வைரஸ் கட்டுப்படுத்தப்படும். ஹைட்ராக்சிக்ளோரோகுயின் மருந்து பற்றி சர்ச்சை கிளம்பியதால்  இந்த ஊசி மருந்தை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. 5 நாள் போதும்ரெம்டெசிவிர் மருந்தை இதுவரை 6 நாள் செலுத்த வேண்டும் என்று டாக்டர்கள் கருதினர். ஆனால், குறிப்பிட்ட நோயாளிகளுக்கு 5 நாள் டோசேஜ்  தந்தாலே போதும்; குணமாகி விடுகிறது என்று தெரியவந்துள்ளது.  பல நாடுகள் இதை பின்பற்றி வரும் நிலையில், இந்தியாவிலும் இந்த மருந்து  பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மூலக்கதை